Translate

Tuesday, March 23, 2021

Rajini's real emotional story

 

ரு நடிகர், தனது நான்கு படத்தை நடித்து முடித்த பின்னர் வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு தயாரிப்பாளரின் அசிஸ்டன்ட் தனது படத்திற்கு துணை நடிகராக நடிக்குமாறு கூறினார்.  அந்த நடிகரும் நடிக்க ஒப்புக்கொண்டார்.  ஆனால் ஒரு வேண்டுகோள், எனக்கு அட்வான்ஸ்  தருமாறு கூறினார், அந்த நடிகர்.  அசிஸ்டன்ட் தனது தயாரிப்பாளரிடம் அதை பற்றி பேசியபொழுது அவர் அந்த நடிகர் காலையில் படப்பிடிப்பின் பொழுது அட்வான்ஸ்  செலுத்தப்படும் என்றார்.    அசிஸ்டன்டும் அந்த நடிகரிடம் தயாரிப்பாளர் கூறியதை கூறினார்.  அந்த நடிகரும் மறுநாள் காலையில் காரில் அழைத்து படப்பிடிப்பிற்காக வந்தார்.  அவர் அட்வான்ஸ்யை  கேட்டார்.  அதற்கு அசிஸ்டன்ட், “ முதலில் மேக்கப் போடுங்கள், பின்னர் அட்வான்ஸ் செலுத்தப்படும் ” என்றார்.  அந்த நடிகர், “ முதலில் அட்வான்ஸ்யை  செலுத்தங்கள், பின்னர் மேக்கப் போடுகிறேன் ” என்றார்.  அசிஸ்டன்ட் அவரது தயாரிப்பாளரிடம் தொலைபேசியில் அழைப்பு விடுத்தார்.  தயாரிப்பாளர் ஆணவத்துடன் இட்டாலியன் பியட் காரில் வந்திறங்கினார்.  தயாரிப்பாளர் அந்த நடிகரிடம், “ நீ என்ன பெரிய புடிங்கியா ? அட்வான்ஸ்  குடுத்தாதான் நடிப்பியோ? உனக்கு படமும் கிடையாது ஒன்னு கிடையாது! உன்னைய மாறி எத்தென பேரையோ பார்த்திருக்கேன்! கார்லாம் கெடையாது நடந்தே போ!! ” என்று கோபத்துடன் கூறினார்.  தயாரிப்பாளர் ஏசிய ஒவ்வொரு சொல்லும் நடிகர் மனதில் காயமானது.  அவர் நடந்துக்கொண்டிருக்கும் பொழுது சிலர் கேளிசேதனர்.  அவர் அதனை கேட்காமல் தயாரிப்பாளர் எசியதை எண்ணி “ நானும் இட்டாலியன் பியட் கார்ல கெத்தா இறங்கி, கெத்தா 555 சிகேரட்  வாய்ல  வெச்சு, அந்த தயாரிப்பாளர் முன்னாடி கெத்தா நிக்கணும், இந்த புடுங்கிதான் ஓன் முன்னாடி இவ்ளோ பெருசா இருக்கான் ” என்று மனதில் நினைத்தார்.  எண்ணி  2½ ஆண்டுகளில்  இட்டாலியன் பியட் கார்ல கெத்தா இறங்கி, கெத்தா 555 சிகேரட்  வாய்ல  வெச்சு, அந்த தயாரிப்பாளர் முன்னாடி கெத்தா நின்னார்.  “ இந்த புடுங்கிதான் ஓன் முன்னாடி இவ்ளோ பெருசா இருக்கான் “ என்று அந்த தயாரிப்பாளரிடம் பெருமையுடன் கூறினார்.

அவர் தான் சிவாஜி ராவ்.  👌சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.

No comments:

Post a Comment